இலங்கை சென்றார் லொஸ்லியா!... 14 நாட்கள் தனிமைப்படுத்தலில்

Report
2746Shares

தந்தை உயிரிழந்த நிலையில் லாஸ்லியா இலங்கைக்கு வந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் ஈழப்பெண்ணான லாஸ்லியா. இவர் தந்தை மரியநேசன் கனடாவில் தங்கி பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் கனடாவில் அவர் மாரடைப்பால் காலமானார்.

ஆனால் மரியநேசன் உடலை இலங்கைக்கு கொண்டு வர 1 அல்லது 2 வாரம் ஆகலாம் என அவரின் மச்சான் மயூரன் சமீபத்தில் கூறினார்.

இந்த சூழலில் லாஸ்லியா தனது குடும்பத்தாரை சந்திக்க இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அவர் 14 நாட்கள் இலங்கை தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கிணங்க தனிமைப்படுத்தலில் இருந்து பின் தன் குடும்பத்தை சந்திப்பார் என தெரிய வந்துள்ளது.

You May Like This Video