காதல் படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த நடிகையா இது?.. தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க

Report
450Shares

தமிழ் சினிமாவில் காதல் திரைபடத்தில் நடிகை சந்தியாவிற்கு தோழியாக நடித்து பிரபலமானவர் தான் சரண்யா நாக். இவர் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறியுள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 1998ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் நடிகர் பார்த்திபன், தேவயானி, அஜித் உள்ள பல பிரபலங்கள் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, முதல் படமான 'காதல்' படத்தில் நடிகை சந்தியாவிற்கு தோழியாக சரண்யா நாக் நடித்தார்.

ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் அவரது கதாபாத்திரம், சந்தியா கதாபாத்திரத்திற்கு நிகராக நல்ல விமர்சனங்களை பெற்றது.

மேலும் இயக்குனர் எஸ். பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவான பேராண்மை படத்தில், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் வசுந்தரா, தன்சிகா ஆகியோருடன் இவரும் நடித்தார்.

இதைத்தொடர்ந்து இவர் நடித்த சில படங்கள் படு தோல்வியை சந்தித்ததால் திரையுலகில் இருந்தே முழுமையாக விலகினார்.

இறுதியாக இவர் 2015 ஆம் ஆண்டு ஈர வெயில் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. இடையில் இவர் ஒரு சில குறும் படங்களில் கூட நடித்திருந்தார்.

இதன்பின்னர் தைராய்டு, pcos போன்ற பிரச்சனைகள் காரணமாக இவருடைய உடல் எடை கூடியது.

உடல் எடை கூடியதும், இந்த திறமையான நடிகை தன்னை தானே மறைத்து கொண்டார். எனவே விரைவில், எடை குறைந்தபின் நடிக்கவும் முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையுலகில் இருந்து தன்னை மறைத்து கொண்டாலும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சரண்யா அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.