பிக்பாஸ் வீட்டிற்குள் எலியும், பூனையுமாக இருக்கும் பாலா, சனமா இது? வெளியே அடிய ஆட்டத்தைப் பாருங்க

Report
471Shares

கடந்த சில தினங்களுக்கு முன்பு சனம் மற்றும் பாலாஜி இடையேயான பிரச்சினை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

சனம் ஷெட்டியை, பாலாஜி ‘அட்ஜஸ்ட்மென்ட், காம்ப்ரமைஸ்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி அசிங்கப்படுதியாக சனம் ஷெட்டி புகார் எழுதியிருந்ததை அடுத்து பாலாஜிக்கு எதிராக பல எதிர்ப்புகள் எழுந்தது.

இவர்கள் தங்களது துறையினைக் குறித்து விவாதித்த போது, இருவருக்கும் இடையே பெரும் விவாதம் ஏற்பட்டது.

சமீபத்தில் இவர்களின் பிரச்சினையினால் ஒரு ப்ரோமோ கூட பிரபல ரிவி நிறுத்தி வைத்தது. இந்நிலையில் இவர்கள் இருவரும் பொதுநிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

காரணம் என்னவென்றால், உள்ளே எலியும், பூனையுமாக இருக்கும் சனம், பாலாஜி இப்படியெல்லாம் ஒற்றுமையாக இருந்து, புகைப்படங்கள் எல்லாம் எடுத்துள்ளார்களே என்பது தான்.