ஏழை பெண்ணை MBBS ஆக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்! குடிசையில் வாழ்ந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாணவி

Report
992Shares

நீட் தேர்வில் வெற்றி பெற செய்து ஏழை மாணவிக்கு மருத்துவ சீட் வாங்கியதார்க்கு சிவகார்த்தியேன் உதவியுள்ளது பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

தமிழக மாணவர்கள்களுக்கு மருத்துவ சீட்டு 100% கிடைத்துவிடுவதில்லை.

இந்த நிலையில் ஏழை மாணவி ஒருவரின் மருத்துவ கனவை சிவகார்த்திகேயன் நனவாகியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணியை அடுத்த பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த டெய்லர் கணேசன்- சித்ரா ஆகியோரின் மகள் சஹானா.

கஜா புயலால் சேதமடைந்த வீட்டில் மின்சார வசதி இல்லாததால் சூரிய வெளிச்சத்திலும், பள்ளி அருகே இரவில் தெருவிளக்கு வெளிச்சத்திலும் படித்த இவர், மருத்துவராக வேண்டும் என்ற உறுதியுடன் நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்திவந்துள்ளார்.

மாணவி சஹானாவின் நிலையை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், சஹானாவை தஞ்சாவூரில் உள்ள தனியார் நீட் பயற்சி மையத்தில் சேர்த்து, கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி பெற கடந்த செய்தார்.

இந்நிலையில், நடந்து முடிந்து நீட் தேர்வில் 273 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்து.

இதனை முன்னிட்டு சிவகார்த்திகேயனுக்கு குறித்த மாணவி நன்றி தெரிவித்துள்ளார். எனது மருத்துவ கனவிற்கு உயிர் கொடுக்க பலரும் உதவி செய்தனர். நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் எனது கனவு நனவாகியுள்ளது என்றும் நெகிழ்ச்சியியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த பலரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.