எல்லை மீறிபோகும் ஷிவானி மற்றும் பாலாஜி.. கட்டியணைத்த unseen-வீடியோவை கண்டு கதறும் ரசிகர்கள்

Report
3550Shares

பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் பாலா மற்று ஷிவானி இடையே ஓடும் லவ் ட்ராக் தான் தற்போது அதிகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பாலாஜி மற்றும் ஷிவானிக்கு இடையே காதல் இல்லை என்று இவர்கள் இருவரும் சொல்லிக் கொண்டு வந்தாலும் மற்ற போட்டியாளர்கள் அனைவருமே பாலாஜி ஷிவானி காதலித்து வருகிறார்கள் என்றுதான் சூசகமாக பேசிக்கொண்டு வருகிறார்கள்.

மேலும், ஷிவானி தான் பாலாஜியிடமே சுற்றி வருவதும் தெரிகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் கூட ரம்யா பாண்டியன் அவர்களை வைச்சு செய்தார். அவர்கள் வேண்டும் என்றே செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் Unseen வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் டைனிங் டேபிளில் அமர்ந்து சனம் ஷெட்டி, அனிதா, ஆஜித், ரமேஷ், பாலாஜி, சிவானி ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென்று பாலாஜி ஷிவானியை கட்டி அணைத்தார்.

இதைக்கண்டதும், சனம் ஷெட்டி என்ன நடக்கிறது பாலா என்று கேட்க ஷிவானியும் என்ன நடக்கிறது பாலா என்று கேட்டார். அதன் பின்னர் இருவருமே அந்த இடத்தை விட்டு நைசாக கிளம்பி விட்டார்கள். இந்த காட்சி நெட்டிசன்களிடையேவும் ட்ரோல் காட்சியாக பரவிவருகிறது.