ஆற்றை கடக்கும் 50 அடி நீளமான ராட்சத அனகோண்டா! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அரிய வீடியோ.. பின்னணியில் உள்ள விழிபிதுங்க வைத்த உண்மை?

Report
927Shares

ஆற்றை கடக்கும் 50 அடி நீளம் அனகோண்டா பாம்பு ஒன்றின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பிரேசிலின் க்ஸிங்கு ஆற்றில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறப்பட்டது.

மேலும், இன்று (30-10-2020) பதிவான ஒரே நாளுக்குள் இந்த வீடியோவை 7 லட்சத்திற்கும் மேலானவர்கள் பார்த்து பகிர்ந்திருந்தனர்.

ஆனால், உண்மை என்னவெனில், இந்தவீடியோ 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் யூடியூபில் வெளியான பதிவாகும்.

உண்மையில், ஒரு பெரிய அனகோண்டா சாலையில் தேங்கியிருக்கும் நீரை கடந்து செல்லும் வீடியோ தான் அது. அந்த யூடியூப் விடியோ, "Giant anaconda crossing the road" என்ற தலைப்பில் வெளியாகி இருந்தது.

இதை யாரோ டவுன்லோட் செய்து, அதை எடிட் செய்து, 50 அடிநீள அனகோண்டா என்று பெயர்சூட்டி, ஆற்றை கடக்கிறது, கடலை கடக்கிறது என அளந்து கட்டி, பகிர்ந்துள்ளார். உண்மை விவரம் தெரியாத நெட்டிசன்கள் இதை ஆச்சரியத்துடன் கண்டு பகிர்ந்து வருகின்றனர்.

எனவே இந்த 50 அடிநீள அனகோண்டா கதை சுத்த பொய்யாகும் என்பதை தெரிவித்து கொள்ளுகிறேன்.

loading...