நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், காஜல் அகர்வால் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக இந்த மாதத் தொடக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மேலும், வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படமும் வைரலானது.
இந்நிலையில், இன்று நடிகை காஜல் அகர்வால் மற்றும் தொழிலதிபர் கௌதம் கிச்லுவுக்கு மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளது.
திருமண நிகழ்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் காஜல்.