கடும் அதிருப்தியில் நிஷா! கேப்ரியல்லா செய்த மோசமாக செயல்.... கடுப்பாகிய அர்ச்சனா!

Report
1110Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கேப்ரியல்லா செய்த செயல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியாளர்களுக்கான லக்சுரி பட்ஜட் டாஸ்கில், போட்டியாளர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாயின்ட்டில் வீட்டுக்கு தேவையானதை தேர்வு செய்தனர்.

அப்போது அறந்தாங்கி நிஷா, வீட்டுக்கு தேவையான இஞ்சி பூண்டு பேஸ்ட் உள்ளிட்டவற்றை தேர்வு செய்ய, கேப்ரியல்லா பிட்சா, பானிபூரி உள்ளிட்ட பொருட்களை எடுத்தார்.

இதனால் அறந்தாங்கி நிஷா கடுப்பாகி, ''நான் என்ன இஞ்சி பூண்டு பேஸ்டை எனக்காகவா எடுத்தேன். நான் மட்டுமா அதை திங்க போறேன்'' என தனது அதிருப்தியை அர்ச்சனாவிடம் வெளிப்படுத்தினார்.

இதை பார்த்த பார்வையாளர்களும், நிஷாவின் மீது எந்த தவறும் இல்லை., கேப்ரியல்லா செய்தது தவறுதான் என்று சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.