லுங்கியை தூக்கிக் கொண்டு ஆடிய ஷிவானி! கண்ணீர் விட்ட அனிதா? சிரிப்பை அடக்கி கொண்ட போட்டியாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி

Report
4423Shares

பிக் பாஸ் வீட்டில் காலை விடிந்ததும் போட்ட பாட்டுக்கு ஷிவானி, சம்யுக்தா, கேபி, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட எல்லா பெண்களும் லுங்கி கட்டிக் கொண்டு ஆடியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பிக் பாஸ் வீட்டில் தினம் தோறும் பாட்டு போட்டு எழுப்புவதும், அடுத்த செகண்டே எழுந்து கார்டன் ஏரியாவில் குத்தாட்டம் போடுவதும் வழக்கம்.

பிக்பாஸ் போட்டியில், அனிதா சம்பத் அவரது வாழ்வில் மறக்க முடியாத மனிதர் பற்றி பேசும் போது, தனது கணவரைப் பற்றி எமோஷனலாக பேசினார். அப்போது அவர் அதிக நேரம் எடுத்து கொண்டு கண் கலங்கி பேசினார்.

அவர் அதிக நேரம் எடுத்து கொண்டு பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், போட்டியாளர்கள் சிலர் சிரிப்பை அடக்கி கொண்டு இருக்க, சம்யுக்தா குறுக்கிட்டு, அதிக நேரம் எடுத்து கொள்கிறாய் என அனிதாவுக்கு நினைவூட்டினார்.

இதை தொடர்ந்து அனிதாவும் பேச்சை நிறுத்தி கொண்டார். இந்நிலையில் அனிதா ரொம்ப நேரமாக பேசியதை விமர்சித்தும், சம்யுக்தா செய்தது சரியே, அவர் மிகவும் பக்குவமாகதான் அனிதாவிடம் எடுத்து சொன்னார் என சம்யுக்தாவுக்கு ஆதரவாக நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம், அதிக நேரம் எடுத்து கொள்கிறார் என்றால், பிக்பாஸ் அதை நினைவூட்டுவார். சம்யுக்தா சொல்லியது தவறு. இல்லையென்றால் அதை எடிட் செய்து கூட தூக்குவார்கள். இவர் இப்படி நிறுத்த சொல்லலாம் என அனிதாவுக்கு ஆதரவாகவும் கமன்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள்.

loading...