பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்; அப்போ மாப்பிள்ளை இவர் இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Report
713Shares

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா.

இவரை பிக்பாஸ் வீட்டில் கவினுடன் ஏற்பட்ட காதலை இன்று வரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் இருவரும் காதலிப்பதாகவும் பெற்றோர்கள் திருமணத்திற்காக காத்திருக்க சொன்னதாகவும் செய்திகள் உலா வந்தன.

இதையடுத்து, படங்களில் பிஸியாக நடித்து வரும் லாஸ்லியா சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி புகைப்படத்தை பதிவிட்டு அதை ரசிகர்கள் வைரலாக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது வெளியான தகவலின்படி லாஸ்லியாவிற்கு பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கனடாவில் வசிக்கும் நண்பனின் மகனை பெற்றோர்கள் திருமணம் செய்ய பேசியுள்ளதாக தெரிகிறது. கொரோனா ஊரடங்கால் 2021-ல் இவர்கள் திருமணம் நடக்கும் என கூறப்படுகிறது.