சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்.... இந்த சீஸனின் முதல் குறும்படம் யாருக்கு தெரியுமா? சபையில் அம்பலமாக போகும் உண்மை

Report
542Shares

நேற்று முன்தினம் ஆரம்பித்த பிரச்சினை நேற்று பாதி எபிசோட் தாண்டி தான் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

விட்டா நாள் முழுக்க இழுத்துருவாங்க என பிக்பாஸ் நினைத்தார் போல. இந்த பிரச்சினையில் உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு நீங்க சொல்லல என அர்ச்சனா, ரியோ ஆகியோர் பாலாஜியிடம் விவாதம் செய்தனர்.

இதுகுறித்து வேல்முருகனும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் நேற்று முன்தினம் பாலாவை வேல்முருகன் எழுப்பும் போதே உடம்பு முடியல என சொன்னார்.

ஆனால் எதற்கு வம்பு என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை வேல் முருகன் அதை சபையில் சொல்லவில்லை. இதைப்பார்த்த ரசிகர்கள் இவரு ஏன் இப்படி இருக்காரு? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனால் இந்த வார இறுதியில் கமல் இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தும்போது கண்டிப்பாக வேல்முருகனுக்கு குறும்படம் போட்டு காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி போட்டால் அதுதான் இந்த சீஸனின் முதல் குறும்படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...