இந்த வாரம் பாலா தான் எலிமினேட் ஆகனும்... ஏன் தெரியுமா?.. பிரபல ரிவியின் பிரபலம் அதிரடி

Report
907Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி இம்முறை பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் தினமொரு சண்டையும், சுவாரசியமான நிகழ்வும் என ஆரம்பத்திலிருந்தே உற்சாகமாக வைத்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் இன்று அர்ச்சனா மற்றும் பாலா இடையே மிகுந்த சண்டை ஏற்படுகிறது. அதற்கு ஆதரவாக ரியோ, நிஷா, வேல்முருகன் போன்ற பலரும் ஆதரவாக நிற்பதைக் காணமுடிகிறது.

பிக்பாஸில் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்பட வேண்டும் என்பது பற்றி பிரபல ரிவி பிரபலம் ரபிக் வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறும்போது பாலா மற்றும் சனம் எலிமினேட் செய்யப்பட்டால் சந்தோஷப்படுவேன் என்று கூறியுள்ளார். மேலும் "சனம் சுத்தமாக சம்பந்தமில்லாமல் பேசுகிறார். அதேபோல கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கமல்ஹாசனுக்கு "லவ் யூ" சொன்னதும், அவர் கண்டு கொள்ளாமல் செல்ல, சில போட்டியாளர்கள் சிரித்தது வேடிக்கையாக இருந்தது.

பாலா பேசுவது மற்றவர்களை புண்படுத்தும் வகையில் இருக்கிறது. அவர் அவ்வாறு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

loading...