கதறி அழுத பிக் பாஸ் வனிதாவா இது? படு மேக்கப்புடன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ! திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

Report
523Shares

நடிகை வனிதா அண்மையில் கண்ணீருடன் கணவர் ஏமாற்றி விட்டதாக கூறி காணொளி வெளியிட்டிருந்தார்.

தற்போது அவர் மேக்கப்புடன் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

நடிகை வனிதா விஜயகுமார் விஷ்வல் எடிட்டரான பீட்டர்பாலை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்தார்.

பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் மனைவி இருந்த போதும் அவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார் வனிதா.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவரை பிரிந்துவிட்டதாக வனிதா தெரிவித்தார். அவர் மீண்டும் குடிக்கு அடிமை ஆகிவிட்டதாகவும் அவருக்கு தன் மீதுள்ள அன்பை காட்டிலும் போதை பொருட்கள் மீதுதான் அதிக ஆர்வம் உள்ளதாகவும் கூறினார்.

பீட்டர் பாலை நம்பி ஏமாந்துவிட்டதாகவும் தோற்று போய்விட்டதாகவும் கூறினார் வனிதா. தனக்கும் திருமண பந்தத்துக்கும் அதிர்ஷ்டம் இல்லை என்று கூறியும் புலம்பினார்.

பீட்டர் பாலை அவரது முதல் மனைவியே வைத்துக் கொள்ளட்டும் என்றும் நடுவில் வந்த நான் நடுவிலேயே போகிறேன் என்றும் கூறினார் வனிதா.

இந்நிலையில் வனிதா இப்போது வெளியிட்ட காணொளி பார்த்து விட்டு ரசிகர்கள் மீண்டும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

loading...