கன்பெஷன் அறையில் கதறி அழுத அனிதா! பிக் பாஸிடம் பேசிய கணவர்? அடுத்தடுத்து காத்திருந்த இன்ப அதிர்ச்சி

Report
361Shares

நேற்றைய தினம் பிக்பாஸ் தொடர் ஒளிபரப்பாக 4 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் 'சுமங்கலிகள்' பற்றி பேசும்பொழுது அனிதா மற்றும் சுரேஷ் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து நேற்று முழுவதும் தொடர்ந்த இந்த சண்டையில் அனிதா சுரேஷிடம் மன்னிப்பு கேட்க முயன்றும், அவர் பேச மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இன்று அனிதா பிக் பாஸிடம் தனிமையாக உணர்வதாகவும், தவறுகள் தன் மீது இருப்பதாக நினைப்பதாகவும் கூறி கதறி அழுகிறார்.

அவரை பிக் பாஸ் ஆறுதல் படுத்தும் விதமாக கூறுகின்றார். இதன் போது அனிதாவின் கணவர் அம்மு குட்டியை கேட்டதாக குறிப்பிட்டார்.

அனிதாவின் கணவர் பிக் பாஸிடம் பேசியதாகவும் கூறியுள்ளார். இதனை கேட்டு அனிதா மேலும் இன்ப அதிர்ச்சியில் கதறி அழுகின்றார்.

இந்நிலையில் திடீரென அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் கூறியதில் தவறில்லை என்றும் அவர் சொல்லிய வார்த்தைகள் தான் தவறு என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும், ப்ரோமோ எடிட்டரை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

loading...