பிக் பாஸ் வைத்த மிகப் பெரிய ஆப்பு ! இந்த வாரம் யார் யார் வெளியேறப் போகிறார்கள்? நீண்டு கொண்டே போகும் நாமினேஷன் லிஸ்ட்

Report
169Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மொத்தம் 11 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் திங்கள் கிழமை நாமினேஷன் நடைபெறுவது கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் தொடருகிறது.

அதன்படி பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. கடந்த நாமினேஷன் புராசஸ்களை காட்டிலும் இந்த நாமினேஷன் புராசஸ் சற்று வித்தியாசமாக இருந்தது.

இருப்பினும் ஹவுஸ்மேட்ஸ் தங்களுக்கு ஆகாத போட்டியாளர்களை உற்சாகமாக தீயில் போட்டு கொளுத்தினர். ஹவுஸ்மேட்ஸ்களை தாங்கள் நாமினேட் செய்ததற்கான காரணத்தையும் வெளிப்படையாக கூறினர்.

மொத்தம் 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 11 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர். ஏற்கனவே ரியோ, நிஷா, அனிதா சம்பத் ஆகியோர் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி உள்ளனர்.

ஏற்கனவே ரியோ பிக்பாஸ் வீட்டில் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து நாமினேஷனுக்கு வாங்க வச்சு செய்கிறோம் என கூறி வருகின்றனர். இந்நிலையில் ரியோவும் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளார்.

இதனால் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

loading...