அவருக்கு எல்லாம் தெரிந்தும் செய்தார்.. அதனால் தான் இப்படி செய்தேன்; விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த நபர் கதறல்!

Report
754Shares

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு '800' என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என, தமிழகத்தில் கடும் எதிர் கிளம்பியது.

இதனால், முத்தையா முரளிதரன் தன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

அதற்கு, விஜய் சேதுபதியும் நன்றி வணக்கம் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இதையடுத்து, ட்விட்டரில் ஒருவர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ஆபாசமாக மிரட்டல் விடுத்திருந்தார்.

@ItsRithikRajh என்ற ஐடியில் உள்ள அந்த நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி.கனிமொழி உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்தனர்.

அந்த நபர் மீது 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையிலும் பொலிசார் இறங்கினர்.

இந்நிலையில் தற்போது அந்த இளைஞரை இலங்கையைச் சேர்ந்த தமிழ் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்துள்ளது.

அதில் பேசிய அந்த நபர், விஜய் சேதுபதி சார்-யை பற்றியும், அவரது மகளை பற்றியும் தப்பாக பேசிய இந்திய வம்சாவளி இலங்கை தமிழர் நான் தான். அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள்.

எனக்கு மன்னிப்பு கிடையாது என்று எனக்குத் தெரியும். ஒரு சின்னக் குழந்தையைத் தப்பா பேசிவிட்டேன். நான் என் வாழ்நாளில் இப்படி பேசியது இல்லை.

நான் ஏன் அப்படி பேசினேன் என்றால், எனக்கு கொரோனாவால் வேலை போய்விட்டது. இலங்கையில் நடந்த போரைப் பற்றி அவருக்கு எல்லாம் தெரிந்தும் அவர் நடிக்க ஒத்துக் கொண்டதாலேயே அப்படி ஒரு டிவிட்டை நான் போட்டேன்.

இனிமேல் வாழ்நாளில் இது போன்ற டிவிட்டை நான் போடமாட்டேன். இதற்கு நான் உலகில் வாழும் தமிழர்களிடமும், விஜய்சேதுபதி அண்ணினிடமும்.அவரது மகள் என் தங்கச்சி மாதிரி அவரிடமும். அவரது மனைவியிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.

உங்கள் தம்பியா நினைத்து என்னை மன்னித்து விடுங்கள். நான் வாழ்க்கையில் இந்த தவறை செய்யமாட்டேன். விரக்தியில் தான் இப்படி செய்துவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.