அட இவங்க தான் பிக்பாஸ் சுரேஷ் மனைவி மற்றும் மகனா.. தீயாய் பரவும் வைரல் புகைப்படம் இதோ!

Report
1384Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

மேலும், இரண்டு வாரம் கடந்த நிலையில், கடந்த வாரம் ரேகா வெளியேறினார். அதைத்தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என புரியாத புதிராகவே உள்ளது.

இந்த நிலையில், சுரேஷ் சக்கரவர்த்தியும் ஒரு சிலருக்கு தெரிந்த முகமாக இருந்தாலும் பலருக்கு இவரைப்பற்றி தெரியாமல் தான் இருந்தது.

இவரும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தான். இவர் விசு, எஸ் பி பி என்று பல்வேறு ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் இவரை அனைவருமே ஒரு டெரரான பீஸ் என்றுதான் நினைத்தார்கள். அதேபோல இவர் இந்த சீசன் வனிதா என்றும் பலரும் விமர்சித்து வந்தார்கள்.

ஆனால் போகப்போக இவர் செய்யும் சேட்டைகளை பார்த்து இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமும் அமைந்துவிட்டது.

என்னதான் ஒரு சில நேரத்தில் மற்ற போட்டியாளர்களை வேண்டுமென்றே வம்பு இழுந்தாலும் டாஸ்க் என்று வந்துவிட்டால் சுரேஷ் மற்ற போட்டியாளர்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், சுரேஷின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கிறார் சுரேஷ்.