நடிகர் வடிவேலுவின் 15 வருட சினிமா ராஜ்யம் உடைய இதுதான் காரணமாம் - சகநடிகரின் பரபரப்பு பேட்டி

Report
1571Shares

தமிழ் சினிமாவில் காமெடியில் உச்ச நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவர் படங்களில் நடிக்கமால் இருந்தாலும், இவருடைய காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், இவருடைய திரைப்பயணம் இப்படி சுக்குநூறாக உடைந்து என்ன காரணம் என நடிகர் சிங்கமுத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சிங்கமுத்து மட்டுமின்றி ஜோதிடரும் ஒருவரும் கூறியுள்ளார். அவர் வடிவேலுவை ஜாதகத்தை கணித்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், வடிவேலுவின் திரைப் பயணம் சுக்கு நூறாக உடைய அவருடைய ஜாதகத திசை தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

அதனால் தான் தயாரிப்பாளர்களையும் அரசியல்வாதிகளை பற்றி பேசி வம்பை விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க வந்தால் என்னுடைய முழு சப்போர்ட் அவருக்கு இருக்கும் ஏனென்றால் அவர் மிகப் பெரிய திறமைசாலி என தெரிவித்துள்ளார்.

மேலும், வடிவேலு மற்றும் சிங்கமுத்து இருவருக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

வடிவேலு சிங்கமுத்து மீது 7 கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்து உள்ளார், அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.