பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது இவர்தான்.. வெளியான பரபரப்பு தகவல்

Report
9330Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் ரேகா வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து, இந்த வார நாமினேஷனில் நடிகர் ஆரி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத் மற்றும் ஆஜித் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நால்வரில் ஆரி பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோருக்கு ஓரளவிற்கு நல்ல ஓட்டுகள் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், அனிதா சம்பத் மற்றும் ஆஜித் ஆகியோர் மட்டுமே குறைவான ஓட்டுகளை பெற்று உள்ளனர். இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, அனிதா எதையாவது பேசி கலவரத்தை உண்டு செய்து வருவதால் அவரை நிச்சயம் வெளியேற்ற மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பிக் பாஸ் வீட்டில் இருக்குமிடம் தெரியாமல் இருக்கும் ஆஜித் வெளியேறவே வாய்ப்புகள் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆனால் அவரிடம் இருந்த ஏவிக்ஷன் ப்ரீ பாஸை பயன்படுத்தி அவர் இந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பித்து இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

என்ன நடக்கிறது யார் வெளியேறுகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

loading...