தன் கணவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி... நடிகை கஸ்தூரி அளித்த சரியான பதிலடி

Report
1790Shares

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் கஸ்தூரி.

இவர் சத்யராஜ், பிரபு, கார்த்திக் என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடம் பிரபலமானார்.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் கஸ்தூரி அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என எவருக்கும் அஞ்சாமல் பல பிரச்சினைகளுக்கு வெளிப்படையாக தனது கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

கஸ்தூரி சமீபத்தில் கூட வனிதா தனது மூன்றாவது திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு உடனடியாக பதில் அளிக்கும் நடிகை கஸ்தூரியிடம் நெட்டிசன் ஒருவர், ஏன் அனைத்து பிரபலங்களும் தங்களது கணவர்களை வெளியே காட்டுவது இல்லை. அதற்கு ஏதாவது காரணம் இருக்கா? என கேட்டிருந்தார்.

அதற்கு நடிகை கஸ்தூரி, எங்களது குழந்தையைக் கூட விட்டு வைக்காத வக்கிர புத்தியுடையவர்கள் இருக்கும்போது, நாங்கள் ஏன் குடும்ப விவரங்களை வெளிப்படுத்த வேண்டும்.

எனது கணவர் பெயரைக் கேட்டு எங்களுக்கு குடும்ப அட்டையா வாங்கித் தர போகிறீர்கள். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என்னுடையது. அது கண்காட்சி கிடையாது.

என்னுடைய நண்பர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என்னை பற்றி தெரியும் மற்றவர்களுக்கு ஏன் தெரிய வேண்டும் என பதில் அளித்துள்ளார்.

loading...