கிழித்துத் தொங்க விட்ட ரசிகர்கள்! ரொம்ப அசிங்கமாகிடுச்சி.... பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா சுரேஷ்? தீயாய் பரவும் பரபரப்பு தகவல்

Report
7285Shares

பிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறப் போகிறார் என்கிற பரபரப்பு தகவல் வெளியாகி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல இன்றைய நிகழ்ச்சி இருந்தது.

சனம் ஷெட்டி தன்னை தரக்குறைவாக பேசியதால், இதுவரை இல்லாத அளவுக்குத் தானே பிக் பாஸிடம் கோரிக்கை வைத்து கன்ஃபெஷன் ரூமுக்கு சென்று சுரேஷ் சக்கரவர்த்தி முறையிட்டார்.

இந்த ப்ரோமோ காட்சிகள் வெளியான பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டே சுரேஷ் வெளியேறப் போகிறார் என்கிற தகவல் தீயாக பரவி வந்தது.

தான் விளையாட்டாக செய்தது. எனக்கு கொடுத்த டாஸ்க் படி அரக்கர்கள் உள்ளே வரக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்தேன் என்று அழுது கொண்டே பிக் பாஸிடம் குறிப்பிடுகின்றார்.

உடனே பிக் பாஸ், நீங்கள் தவறு செய்ததாக நினைத்து தொடர்பு உடையவர்களிடம் மன்னிப்பும் கேட்டு உள்ளீர்கள். மனதை குழப்பி கொள்ளாமல் விளையாடுங்கள் என்று ஆறுதல் வார்த்தை குறிப்பிட்டுள்ளார்.

எனவே பிக் பாஸ் வீட்டில் சுரேஷ் சக்கரவர்த்தி தொடர்ந்தும் விளையாடப்போவது உறுதியாகியுள்ளது. சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிகழ்ச்சியை பார்த்த பார்வையாளர்களும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு தான் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

கேபி உள்பட ஹவுஸ்மேட்ஸ் பலரும் சுரேஷ் சக்கரவர்த்தியை தாத்தா என அழைக்கின்றனர். தாத்தா வயதில் இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தியை ஒரு அப்பா ஸ்தானத்திலாவது நினைத்து பார்த்து, கொஞ்சம் மரியாதையாக சனம் பேசியிருக்கலாம். வாடா, போடா என பெரியவரை பேசியது தவறு என்று பலரும் சனம் ஷெட்டியை திட்டி இருந்தனர்.

சுரேஷ் சக்கரவர்த்தி செய்தது தப்பு என்று தோன்றியிருந்தால், சனம் ஷெட்டி பிக் பாஸிடம் முறையிட்டு இருக்கலாம். அதற்கு பதிலாக, அவரே சுரேஷ் சக்கரவர்த்தை வரம்பு மீறி பேசியது மிகப்பெரிய தவறு என்றே சமூக வலைதளத்தில் சனம் ஷெட்டியை கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர்.

இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் இவர் தான் வின்னர் ஆவார் என முதல் சீசனில் ஓவியாவை ரசிகர்கள் நினைத்து இருந்த நிலையில், அவருக்கு பைத்தியக்காரி பட்டம் கட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றியதை போலவே சுரேஷ் சக்கரவர்த்தியையும் வெளியேற்ற பிக் பாஸ் போட்ட பிளானா என்கிற ரீதியிலும் கேள்விகள் எழுந்துள்ளன.

இன்றைய நிகழ்ச்சிக்கு பின்னர் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனமும் சுரேஷ் சக்கரவர்த்தி மீது திரும்பியுள்ளது.