கண்ணீர்விட்டு பீட்டர்பால் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட வனிதா; கேமராவிற்கு பின் கேட்ட அந்த ஆண் குரல் யார்?

Report
2373Shares

நடிகை பிக்பாஸ் வனிதா தனது மூன்றாவது கணவர் பீட்டர் பாலை பிரிந்த விஷயம் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக இணையத்தில் உலா வருகிறது.

சமீபத்தில், வனிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கோவா சென்ற இவர்கள் அங்கு ஏற்பட்ட சண்டையால் வனிதா பிரிந்ததுபோல் தகவல் வெளியானது.

இதையடுத்து, சமீபத்தில் அளித்த பேட்டியில் பீட்டர் பவுலுக்கு விவாகரத்து ஆனது பற்றி எனக்கு ஆரம்பத்தில் தெரியாது அப்படி தெரிந்திருந்தால் நானே செருப்பால் அடித்து விரட்டி இருப்பேன்.

அவர் மீது நம்பிக்கை இருந்ததால் அதைப் பற்றியெல்லாம் நான் விசாரிக்கவில்லை அவரது மனைவி போலீசிடம் புகார் அளித்த பின்னர்தான் அவர் விவாகரத்து பெறவில்லை என்பதே எனக்கு தெரியும் என்று கூறி இருக்கிறார்.

அதேபோல பிரிவிற்கான காரணத்தை கூறியுள்ள வனிதா அவருக்கு ஏற்கனவே குடி பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

ஆனால், நான் அவரை சந்தித்த பின்னர் அதையெல்லாம் விட்டுவிட்டார் இருப்பினும் அவ்வப்போது குடித்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் இருந்தார். இதனால்தான் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்தோம்.

மேலும், அவருக்காக நான் சேர்த்து வைத்திருந்த அனைத்து பணத்தையும் செலவு செய்தேன் அவருக்காக நான் ஒரு பத்து பதினைந்து லட்சம் ரூபாய் சிகிச்சைக்காக அளித்து இருக்கிறேன். ஆனால் பணத்தை பற்றி ஒன்றும் பிரச்சினை கிடையாது.

அவர் குணமடைந்தால் போதும் என்றுதான் நினைத்தேன். அதன்பின்னர் மருத்துவர்களும் அவருக்கு இனிமேல் குடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.

ஆனாலும், கோவா சென்றபின்பு மது அருந்தி இருந்தார். உள்ளே நுழைந்ததும் ஒரு சிகரெட் வாடை அடித்தது.

இதனால் எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. அங்கிருந்து அவர் கார் ஓட்டி சென்னைக்கு வருவதாக சொன்னார்.

ஆனால் நான் அதைக் கேட்கவில்லை நானே ஒரு 14 மணிநேரம் காரை ஓட்டிவந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

மேலும், வீட்டுக்கு வந்தவுடன் அவரை காணவில்லை அதன்பின்னர் எங்கெங்கோ சென்று தினமும் குடித்து இருக்கிறார். எனக்கு தெரிந்தவர்கள் அவரை வீட்டில் அழைத்து வந்து விடுவார்கள்.

நான் எவ்வளவோ அவரிடம் கேட்டேன் நான் அவர் மீது வைத்திருக்கும் அன்பை விட அந்த குடியும் சிகரெட்டும் முக்கியமா என்றெல்லாம் கேட்டேன். ஆனால் அவர்குடிக்கு அடிமையாகி விட்டார் என்னை பற்றி அவர் கவலைப்படவில்லை.

எலிசபெத் அனுபவித்த வலி என்னவென்று எனக்கு இப்போது புரிகிறது. அவர் இவரைப் பற்றி சொன்ன ஒரு பத்து சதவீதம் எல்லாம் உண்மை போல தான் என்று இப்போது எனக்கு தோன்றுகிறது.

உங்களை நான் எந்த விதத்திலாவது புண் படுத்தி விட்டால் என்னை மன்னித்துவிடுங்கள் எலிசபெத் என்று கண்ணீர் மல்க கூறி இருந்தார் வனிதா.

இப்படி பேசிக்கொண்டிருந்த நிலையில், கேமராவிற்கு பின்னர் இருந்து ஒரு ஆணின் குரல் ‘வாழ்க்கையில ஜெயிச்சி காட்டணும்’ என்று வனிதாவிற்கு ஆறுதல் கூறுகிறது.

அது யார் என்று பலரும் கமெண்ட் செய்தனர். ஒரு சிலரோ அந்த ஆணின் குரல் வனிதாவின் வழக்கறிஞரின் குரல் தான் என்று ஒரு சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வனிதாவின் இந்த வீடியோவில் கூட அவரது வழக்கறிஞரை பற்றி பெருமையாக பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.