ஒரு பீர் குடிச்சது தப்பா... போலீசாரிடம் சிக்கி வெளியே வந்த நடிகை வம்சிகா அளித்த ஆவேச குற்றச்சாட்டு

Report
246Shares

பீர் குடித்து காரை ஓட்டிச்சென்று பொதுமக்களிடம் சிக்கிய நடிகை வம்சிகாவும், அவரை மீட்டுச்சென்ற பாஜக பிரமுகர் பாலாஜியும், பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் வெள்ளிகிழமை ஆஜராயினர்.

வம்சிகாவுக்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட Breath Analysis சோதனையில் அவர் போதையில் காரை ஓட்டி வந்தது நிரூபிக்கப்பட்டதால், அபராதமாக ரூ.10,000 விதிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த அபராத தொகையை கட்டிவிட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியேவந்த வம்சிகா, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், முதலில் காரை அதிவேகமாகமாக ஓட்டவில்லை என்றும், காரில் நிதானம் இழக்கவில்லை என்றும், தன் மீது புகார் அளித்த பெண்ணுக்கு தன் குடும்பத்தில் பிரச்சனை என்று தன் தரப்பு விளக்கத்தை தெரிவித்தார்.

மேலும், தான் மட்டுமா குடித்து விட்டு வாகனம் ஓட்டுகிறேன்?.. கோடம்பாக்கத்தில் நடந்த பார்டியில் பீர் குடித்துவிட்டு வளசரவாக்கம் செல்வதற்காக காரை ஓட்டிச்சென்றேன்.

போதையில் இருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்ததால் தான் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டியதாகவும் பின்னர் ஒப்புக் கொண்டார்.