பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இணையத்தில் உலா வரும் தகவல்

Report
957Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இரண்டு வாரங்களை தொட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

போட்டியாளர்களும் திறமையாக விளையாடி போட்டி போடுகின்றனர். இதையடுத்து இந்த வாரம் ரேகா வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், 'Bigg Boss 4' போட்டியாளர்கள் ஒரு வாரத்திற்கு வாங்கும் சம்பளத்தைப் பற்றிய பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பட்டியலின் படி ரம்யா பாண்டியன், ஆரி, ஜீத்தன் ரமேஷ், ஆறந்தாங்கி நிஷா, சிவானி நாராயணன் மற்றும் ரியோ ராஜ் ஆகியோருக்கு 2 லட்சம் ரூபாய் ஒரு வார சம்பளமாய் கிடைக்கிறது.

சனம் ஷெட்டி, சம்யுக்தா கார்த்திக், சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் மற்றும் வேல்முருகன் ஆகியோர் 1 முதல் 1.5 லட்சம் வரை பெறுகின்றனர்.

மீதமுள்ள போட்டியாளர்களான அனிதா சம்பத், கேப்ரியெல்லா சார்ல்டன், சோம் சேகர் மற்றும் ஆஜித் ஆகியோர் ஒரு வாரத்திற்கு 1 லட்சம் சம்பாதிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.