விஸ்வரூபம் எடுக்கும் முரளிதரன், விஜய்சேதுபதி பிரச்சினை... ஈழத்தமிழர்களுக்குள் எதற்காக இந்த மோதல்?
இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.
இந்த வாரத்தில் தங்களது 105வது படைப்பினை விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன் என்ற தலைப்பில் காணொளியினை வெளியிட்டுள்ளனர்.
இதில் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படமான 800 படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு பல எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும் முத்தையா முரளிதரன் தான் பேசியது திரித்து வெளியில் கூறப்பட்டுள்ளதாக தனது கருத்தினை முன்வைத்துள்ளார். இதுகுறித்து இந்த வாரம் ஈழத்து கலைஞரான பாஸ்கியும், அங்கிளும் கதைக்கும் காரசாரமான விவாதமே இதுவாகும்.