பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்?

Report
349Shares

தமிழில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் தற்போது தான் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

16 போட்டியாளர்களுடன், விஜே அர்ச்சனா 17வது போட்டியாளராக களமிறக்கப்பட்டார்.

உள்ளே நுழைந்த உடனேயே, ஒவ்வொருவருக்கும் விருது கொடுத்து போட்டியாளர்கள் பாரிய அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் இந்த வாரம் கண்டிப்பாக ஒருவர் வெளியேற்றப்படுவார், முதல் வாரத்தில் 'எவிக்ஷன்' ஆகப் போகிறவர்களின் பட்டியலில், ஆஜித், கேப்ரியலா, ரம்யா பாண்டியன், ரேகா, சம்யுக்தா, சனம், ஷிவானி ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் ஆஜித், கேப்ரியலா இளம் வயதினர் என்பதால் அவர்கள் இன்னும் சில வாரங்கள் தாக்குப் பிடிக்க வாய்ப்புள்ளது.

சனம் அடிக்கடி சர்ச்சையை உருவாக்குவதால் அவரை சீக்கிரம் அனுப்ப மாட்டார்கள், இதேபோன்று ரம்யா பாண்டியன், ஷிவானியை அனுப்புவதும் கடினம்.

மிஞ்சி இருப்பவர்கள் என்று பார்த்தால் அது சம்யுக்தா மற்றும் ரேகா தான், இருவரின் ஒருவர் வெளியேறவே வாய்ப்புகள் அதிகம் உண்டு.

அதிலும் ரேகா ஒரு நடிகை என்பதால் அவருக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்புகள் கொடுக்க வாய்ப்புள்ளது, எனவே, அவர் சில வாரங்கள் நீடிக்கலாம்.

எனவே சம்யுக்தாவே வெளியேற அதிக வாய்ப்புகள் உண்டு.