சூடுப்பிடிக்கும் ஆட்டம்.... குறும்படமே தேவையில்ல கிழிந்தது ரியோவின் முகத்திரை! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
6592Shares

பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் யார் என்பது குறித்த டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் உள்ளது என்பதை ஹவுஸ்மேட்ஸ் பச்சையாய் நிரூபித்துள்ளனர்.

இன்று கேப்டன் பதவிக்கான போட்டி நடந்தது. இதில், ரியோ, வேல் முருகன் மற்றும் கேபி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

வேல்முருகனுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் யார்? ரியோவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் யார் என கேட்டார் பிக்பாஸ். அதற்கு ஹவுஸ்மேட்ஸ்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து இருவருக்கும் ஆதரவு தெரிவித்தனர்.

கேபிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் யார்? என்றார் பிக்பாஸ். அதற்கு ஒரே ஆளாய் எழுந்து நின்றார் சுரேஷ் சக்கரவர்த்தி. பின்னர் டாஸ்க்கை அறிவித்த பிக்பாஸ், தாங்கள் ஆதரவு தெரிவித்த போட்டியாளர்களை ஹவுஸ்மேட்ஸ் தூக்கி சுமக்க வேண்டும் என்றார்.

இதனை கேட்டதுமே, சுரேஷ் சக்கரவர்த்தியால் தன்னை சுமக்க முடியாது எனக்கூறி போட்டியிலிருந்து விலகுவதாக கூறினார் கேப்ரில்லா. ஆனால் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை, நான் தூக்குகிறேன். நீ வா, என விடாப்பிடியாக அழைத்து சென்று முதுகில் கேபியை சுமந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி.

ஆனால் தன்னால் சுரேஷ் சக்கரவர்த்தி கஷ்டப்படுவதாக நினைத்த கேப்ரில்லா, சுமார் 9 நிமிடத்தில் சுரேஷின் பேச்சையும் மீறி சாரி தாத்தா என்று கூறி இறங்கிவிட்டார். பின்னர் சாரி தாத்தா , உங்களுக்கு வலிச்சுருக்கும் என்று கூறி அவரை கட்டிப்பிடித்தப்படியே கதறி அழுதார்.

அந்தக் காட்சிகள் ரொம்பவே எமோஷனலாக இருந்தது. ஆனால் இது விளையாட்டும்மா, இதில் அதையெல்லாம் பார்க்கக்கூடாது. எனக்கு வலித்தால் வலிக்கிறது என்று சொல்லியிருப்பேன். ஆனால் வலிக்கவில்லை என அவ்வளவு பேசி அவரை சமாதானப்படுத்தினார் சுரேஷ் சக்கரவர்த்தி.

ஏற்கனவே சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருப்பதாக எவிக்ஷன் ஃபிரி டாஸ்க்கின் போது குற்றம்சாட்டினார். ஆனால் குரூப்பிஸமே இல்லை என்று அடித்துப் பேசிய ரியோ, குரூப்பிஸம் இருப்பதாக கூறிய சுரேஷ் சக்கரவர்த்தியை கட்டம் கட்டி வச்சு செய்தார்.

இந்நிலையில் கேப்டன் டாஸ்க்கில் பச்சையாக அப்பட்டமாக தெரிந்தது பிக்பாஸ் வீட்டில் உள்ள குரூப்பிஸம். தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே ஹவுஸ்மேட்ஸ்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் தன்னை பால் போடும் டாஸ்க்கின் போது வெளியேற்றிய கேப்ரில்லாவை கொஞ்சமும் யோசிக்காமல் கேப்டனாக்க தீவிரமாக முயற்சி செய்தார் சுரேஷ்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், குறும்படமே தேவையில்லை நீங்களே நிரூபித்துவிட்டீகள், பிக்பாஸ் வீட்டில் குருப்பிஸம் உள்ளது என்பதை என்று விளாசியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் சுரேஷ் சக்கரவர்த்தியின் நடவடிக்கையை பார்த்து ஒரே நாளில் உச்சத்துக்கு சென்று விட்டீர்கள் என புகழ்ந்துள்ளனர்.

loading...