தல அஜித்தின் தந்தை பாசத்தினையும் மிஞ்சிய சுரேஷ் சக்கரவர்த்தி! களத்தில் குதித்த ரசிகர்கள்

Report
692Shares

பிக்பாஸ் ஆரம்பித்த தினத்தில் இருந்து இதுநாள் வரை அதிகமாக ப்ரோமோவில் இடம்பிடித்த பெருமை சுரேஷ்க்கு உண்டு. என்றாலும் தற்போது அவருக்கு ஆர்மி ஆரம்பித்து, ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் அளவிற்கு ரசிகர்கள் உருவாகி விட்டனர்.

குறிப்பாக இன்றைய டாஸ்க்கில் கேபியை அவர் சுமந்து நின்றது பாரபட்சம் பாராமல் அவருக்கு ரசிகர்களை வாரிவழங்கி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோவை பார்த்தவர்கள் இந்த மனுஷன் என்னப்பா இப்படி ஸ்கோர் பண்ணுறாரு என சுரேஷ் சக்கரவர்த்தியை நினைத்து வியந்து போயினர்.

முழு நிகழ்ச்சியையும் பார்த்தவர்கள் கேப்ரியலாவுக்கு தனியாக நின்று ஆதரவு கொடுத்த சுரேஷ்க்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர்.

தல அஜித்தின் விஸ்வாசத்தினையும் மிஞ்சி விடும் அளவு மீம்களை அள்ளி வீசி வருகின்றனர்.