நடிகர் மணிவண்ணன் மகனா இது? எங்கு இருக்கிறார் தெரியுமா? வெளியான குடும்ப புகைப்படம்

Report
3097Shares

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து விளங்கியவர் மணிவண்ணன்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். இவர் முதலில் 1978 ஆன் ஆண்டு இயக்குனர் பாரதிராஜாவிடம் அசிஸ்டண்ட்டாக சேர்ந்தார்.

அதன் பின் இவர் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த கோபுரங்கள் சாய்வதில்லை என்ற ஒரு படத்தின் மூலம் தான் இயக்குராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அதனைத்தொடர்ந்து ஜோதி, இங்கேயும் ஒரு கங்கை,நூறாவது நாள், முதல் வசந்தம், சின்னத்தம்பி பெரியதம்பி, ஜல்லிக்கட்டு போன்ற பல படங்களை இயக்கி இருந்தார்.

இதன்பின்னர், 2013 ஆம் ஆண்டு ஜூன் 15ம் தேதி மணிவண்ணனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார். இவரின் மரணத்தை தமிழ் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது.

இந்த நிலையில், மணிவண்ணனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகனின் பெயர் ரகுவண்ணன். இயக்குனர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன், கடந்த 2013 ஆம் ஆண்டு அபி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது, நடிகர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

மேலும், ரகுவண்ணனுக்கு 2016 ஆம் ஆண்டு ஆத்விக் என்ற முதல் குழந்தை பிறந்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டு ஆதித்யன் என்ற இரண்டாம் ஆண் குழந்தை பிறந்தது.