தீவிர சிகிச்சை பிரிவில் எஸ்பி பாலசுப்பிரமணியம்: நெஞ்சை உருக்கும் புகைப்படம் வெளியானது

Report
1249Shares

பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்பி பாலசுப்பிரமணியம் இன்று காலமானார், அவருக்கு வயது 74.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரின் உடல்நிலை தேறி வந்த நிலையில் கார்டியாக் அரெஸ்டால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது, நாளை அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தீவிர சிகிச்சை பிரிவில் எஸ்பிபி சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகி பார்ப்போரின் கண்களை குளமாக்கியுள்ளன.