தந்தைக்கு சிலை வைத்த எஸ்பிபி: பிறந்த ஊரை மறக்காமல் செய்த நெகிழ வைக்கும் உதவிகள்

Report
395Shares

ஆந்திரா - தமிழக எல்லையிலுள்ள கோனேட்டம்பேட்டை என்ற கிராமத்திற்காக கடைசி வரைக்கும் நலத்திட்ட உதவிகளை செய்து வந்தவர் எஸ்பிபி.

எஸ்பிபியின் தந்தை எஸ்பி சாம்பமூர்த்தி ஹரிகதா கலைஞர் என்பதால் ஊருக்கு ஊர் இடம்பெயர்ந்து கொண்டே இருப்பாராம்.

இதனால் தன் மனைவி கர்ப்பமானதை தொடர்ந்து அவரது ஊரான கோனேட்டம்பேட்டையில் விட்டுவிட்டு சென்றார்.

திருவள்ளுர் மாவட்டதில் பள்ளிபட்டு கிராமத்தில் அருகேயுள்ள இந்த கிராமத்தில் தன் தாத்தா வீட்டில் எஸ்.பி.பி. பிறந்தார்.

ஆறு வருடங்களாக இங்கேயே வாழ்ந்து வந்த எஸ்பிபி, பெரிய பாடகர் ஆனாலும் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிராமத்துக்கு செல்வது வழக்கமாம்.

கிராமத்தில் பள்ளிகளை கட்டியுள்ளதோடு, கழிவறை உள்ளிட்ட சுகாதாரப்பணிகளையும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மேற்கொண்டிருந்தார்.

நெல்லூரில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன் தந்தைக்கு சிலை அமைத்தார். அப்போது, கோனேட்டம்பேட்டை கிராம மக்களை தனி வாகனத்தில் நெல்லூருக்கு அழைத்து சென்று சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க வைத்து அன்பு காட்டினார்.

இந்த கிராமத்திலுள்ள சிறிய விநாயகர் கோயிலில்தான் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பெற்றோர் திருமணம் நடைபெற்றது. தற்போது வரை எஸ்.பி பாலசுப்ரமணியம் குடும்பத்தினர்தான் இந்த கோயிலை பராமரித்து வருகின்றார்களாம்.

loading...