எஸ்பிபி விரும்பி சாப்பிடும் உணவு எது தெரியுமா?

Report
2194Shares

எந்த மனக்கவலை இருந்தாலும், வாழ்க்கையில் என்ன பிரச்சினை இருந்தாலும் பாடகர் எஸ்.பி.பி.யின் பாடலை கேட்டால் மனதில் உள்ள கவலைகள் காணாமல் போய்விடும், பலருக்கும் ஏற்றுக்கொள்ளும் கூற்று இதுதான்.

இவரது மரணம் திரையுலகத்திற்கு மட்டும் அல்ல, ஒவ்வொரு இசையை விரும்பும் ரசிகர்கள் மனதில் இன்று எஸ்.பி.பி.யின் மரணம் சுக்கு நூறாக உடைத்துள்ளது.

சிவாஜி, எம்ஜிஆர், விஜய், அஜித் என்று இன்று வரை இருக்கும் ஹீரோக்களின் படங்களுக்கு பாடலை பாடி அசத்தியவர்.

இவருக்கு 2001ல் பத்மஸ்ரீ, 2011ல் பத்மபூஷண் விருதுகளை இந்திய அரசு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் பல விருதுகளை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

எஸ்.பி.பி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படுகா, மராட்டி என 16 மொழிகளில் 45 ஆயிரம் பாடல்கள் பாடி அசத்தியுள்ளார்.

தன் குரல் வளத்தை பாதுகாக்க எந்த சிறப்பு கவனமும் இவர் செலுத்தியது கிடையாது. இவருக்கு பிடித்த உணவு தயிர் சாதம். அசைவ உணவும் விரும்பி சாப்பிடுவார்.

ஐஸ்கிரீம், இனிப்பு என அனைத்தையும் விரும்பி சாப்பிடுவாராம்.

எஸ்.பி.பி.யின் உடல் இந்த மண்ணை விட்டு நீங்கினாலும், அவரது இனிமையான பாடல் இந்த மண்ணை விட்டு நீங்கவே நீங்காது.

அவரது இனிமையான குரல் ஒவ்வொருவரையும் அவருடைய குரலில் கட்டிப் போட்டு தற்போது மவுனமாக அழ வைத்துள்ளது.

loading...