மீண்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசை வென்ற லாஸ்லியா.. வைரலாகும் ப்ரோமோ வீடியோ

Report
855Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது லாஸ்லியாவுக்கு ஆதரவாக ரசிகர்களால் சமூக ஊடகங்களில் லாஸ்லியா ஆர்மி உருவாக்கப்பட்டது.

இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, லாஸ்லியா 3 திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் ஜோடியாக நடிக்கிறார்.

இந்த திரைப்படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பு, லாஸ்லியா மீண்டும் ஒரு முறை டிவியில் வர மாட்டாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் 3வது சீசனில் பங்குபெற்ற லாஸ்லியா, அபிராமி, பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், சக்ஷி அகர்வால், ரேஷ்மா உள்ளிட்டோர் விஜய் டிவி நடத்தும் ஸ்டார் மியூசிக் என்ற புதிய நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடியுள்ளனர். அதில், லாஸ்லியா ரூ.1 லட்சம் பரிசு வென்று சந்தோஷமாக கொண்டாடியுள்ளார்.

விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவை ‘ரொம்ப lucky girl போலயே இவீங்க’ என்று ட்வீட் செய்து, பகிர அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

loading...