படுத்த படுக்கையாக இருக்கும் தமிழ் நடிகை : மகளுக்காகவே உயிர் வாழுகிறேன்… கண்ணீர் சிந்த வைத்த பின்னணி! ஷாக்கான ரசிகர்கள்

Report
1191Shares

மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகை சிந்து தன் மகளை பற்றி யாரும் தவராக பேச வேண்டாம் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகை சிந்து சிகிச்சைக்கு பணமில்லாமல் போராடி வரும் தகவல் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

நடிகை சிந்து அங்காடித் தெரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்திருப்பவர்.

இந்நிலையில் இணைய ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் நடிகை சிந்து,

“நான் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாகவே எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்திருக்கிறது. எனக்குத் தெரியவில்லை. கொரோனா காலத்தில் நான் சிகிச்சைக்காக சென்ற போது சிறிய நீர்க்கட்டி இருக்கிறது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அதனால் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வந்தேன்.

பின்னர் எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டபோது பணம் மொத்தமும் செலவானது. அப்போதுதான் நடிகர் ப்ளாக் பாண்டியை அழைத்தேன். அவர் எனக்கு கிட்டத்தட்ட 30 வருடங்களாக தெரியும். அவர் வந்த பின்னர் தான் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டோம். நிறைய உதவிகள் கிடைத்தன.

ஒருவாரத்துக்கு மருந்துகள் வாங்க மட்டும் ரூ.30000 தேவைப்படுகிறது. இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்திருக்கிறேன். நான் இல்லையென்றால் எனது மகளுக்கு ஆதரவு இல்லை.

என்னிடம் காசு, பணம் இருந்து நான் நனறாக இருந்த போது என்னுடன் இருந்தவர்கள் இப்போது எனக்கு உதவி செய்ய முன் வரவில்லை. என்னைப் பற்றியும் என் மகளைப் பற்றியும் தவறாக பேசுகிறார்கள்.

சிலர் என் மகள் ஒருவருடன் ஓடிப் போய்விட்டார் என்றெல்லாம் பேசுகிறார்கள். நான் எனது மகளுக்காக மட்டுமே வாழ்கிறேன். என் மகள் ஒரு டிசைனர். அவரைப் பற்றி தவறாகப் பேசும் போது என் மனது வலிக்கிறது.என் மருத்துவ சிகிச்சைக்காக நீங்கள் உதவி செய்தால் இதிலிருந்து மீண்டு வந்து புற்றுநோய் நோயாளிகளுக்கு உதவி செய்வேன். எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.