பிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் ஒரே ஹோட்டலில் உள்ளார்களா?.. கசிந்த புகைப்படங்கள் இதோ!

Report
797Shares

பிக்பாஸ் சீசன் 4 தமிழ் எப்பொழுது தான் வெளியாகும் என ரசிகர்கள் காத்துகொண்டிருக்கின்றனர். இதுவரை இரண்டு ப்ரோமோவும் வெளியானது.

இந்த வாரம் மூன்றாவது ப்ரோமோவும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த சீசனில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களின் பெயர்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் உலா வருகிறது.

இதையடுத்து, சமீபத்தில் கூட ஷிவானி பிக் பாஸில் கலந்து கொள்வது உறுதி என்று தகவல் வெளியான நிலையில் ரியோ ராஜ், கிரண், ரம்யா பாண்டியன், வேல் முருகன் கிரண், போன்ற பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் தற்போது ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவலும் வெளியானது.

அந்த வகையில் நடிகர் ரியோ ராஜ், ஷிவானி. ரம்யா பாண்டியன் போன்றவர்கள் பதிவிட்டுள்ள ஷிவானி. புகைப்படங்களில் ஒரே மாதிரியான அறையில் எடுக்கப்பட்டது போல உள்ளது

இதனால், இவர்கள் அனைவரும் ஒரே ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், ஏற்கனவே பிக் பாஸ் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்ட இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள போட்டியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிக் பாஸில் பங்குபெற முடியாது.

எனவே, எப்போது வேண்டுமானாலும் போட்டியாளர்களின் பெயர்கள் மாற்றப்படலாம் என்ற நிலையில் உள்ளது.

loading...