விக்னேஷ் கைகளை பிடித்தவாறு செம ஸ்டைலாக வந்த நயன்தாரா... தீயாய் பரவும் புகைப்படங்கள்

Report
3434Shares

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் கொடிகட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்தபோது, நயன்தாராவிற்கும், அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, புகைப்படங்களை வெளியிடுவது என பிஸியாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் குடும்பத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவா சென்றனர். மேலும் அங்கு நயன்தாரா அம்மாவின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த 18ம் தேதி விக்னேஷ் சிவன் பிறந்தநாளும் செம விமரிசையாக நயன்தாராவால் அட்டகாசமான பார்ட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் அனைத்து கொண்டாட்டங்களும் முடிவடைந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தனி விமானம் மூலம் சென்னை வந்து இறங்கியுள்ளனர்.

விக்னேஷ் கைகளைப்பிடித்தவாறு செம ஸ்டைலாக விமானத்திலிருந்து இறங்கிய புகைப்படங்களை நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஹோம் ஸ்வீட் ஹோம் என பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.

loading...