மனைவியை விட்டு பிரிந்தது ஏன்? பிக்பாஸ்க்கு பின் உண்மையை போட்டுடைத்த பிரபலம்

Report
2053Shares

தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்டு வெளியேறிய நடிகர் சூர்யா கிரண் தன் மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து அசத்தியவர் சூர்யா கிரண்.

இவருக்கும் தமிழில் சமுத்திரம் படத்தில் நடித்த கல்யாணி என்பவருக்கும் திருமணமானது.

ஆனால் தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர், இதுபற்றி கூறிய சூர்யா கிரண், வாழ்க்கையில் வெற்றிகளையே பார்த்த பிறகு தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வீட்டை ஜப்தி பண்ணாங்க, காரை எடுத்துக்கிட்டாங்க. நடிகை கல்யாணியை பிரிந்ததற்கு காரணமும் கூட அதுதான். அப்போது எனக்கு விபத்தும் நேர்ந்தது. எல்லாம் கெட்ட நேரமும் ஒன்றாக வந்தது என தெரிவித்துள்ளார்.

இவர் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு முதல் வாரத்திலேயே எலிமினேட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.