ரம்பாவினுடைய இயற்பெயர் என்ன தெரியுமா? இலங்கையரை திருமணம் செய்து செட்டிலான பின்னர் கூறிய சுவாரஷ்யங்கள்

Report
735Shares

தனது நடிப்பால் எண்ணற்ற உள்ளத்தை அள்ளிய ரம்பாவினுடைய இயற்பெயர் விஜயலக்ஷ்மி .

இது பலருக்கு இன்று வரை தெரியாத ரகசியம்.

அண்மையில் ஊடகம் ஒன்று வீடியோ கால் மூலம் அவரை நேர்காணல் செய்திருந்தது. இதன் போது பல சுவாரஷ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

அதில் ஒன்று தான் அவருக்கு பெயர் வைத்த அனுபவம்.

சினிமாவுக்காக தனது பெயரை அமிர்தா என்றும் முதலில் மாற்றியுள்ளார். அது அவ்வளவாக புகழினை கொடுக்க வில்லை என்பதால் ரம்பா என்றும் மாற்றி கொண்டார்.

தமிழில் அவர் நடித்த முதல் திரைப்படம் "உழவன்" ஆயினும் பட்டி, தொட்டி எங்கும் அவருடைய பெயரை கொண்டு சேர்த்தது "உள்ளத்தை அள்ளித்தா" திரைப்படமே. ரசிகர்களால் "தொடை அழகி" என ஆசையோடு அழைக்கப்பட்டார்.

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இதேவேளை, ரம்பாவுக்கும் இலங்கை தமிழரான இந்திரகுமார் பத்மநாதனுக்கும் 2010-ல் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது குடும்பத்துடன் அழகிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் ரம்பா மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.