வடிவேல் பாலாஜி பற்றி பேசி கடும் எமோஷனலான ரம்யா! அது அவரில்லை.... ஒரு வாரத்திற்கு பிறகு வெளிவரும் பல உண்மைகள்

Report
1240Shares

வடிவேல் பாலாஜி பற்றி பல நினைவுகளை விஜே ரம்யா ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட எமோஷனலான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதுகுறித்து பேசிய அவர்,

வடிவேல் பாலாஜி அவர்களின், முதல் ஷோவில் நான் தான் தொகுப்பாளராக இருந்தேன்.

முதன்முதலில் அவரை பார்த்த போது, நிஜமாகவே வடிவேலு தான் வந்திருப்பதாக நினைத்தேன்.

பிறகு அருகில் சென்று பார்த்த போதுதான், அது அவரில்லை என தெரிந்தது. அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர் வடிவேல் பாலாஜி என அவர் தெரிவித்தார்.

மேலும் வடிவேல் பாலாஜி இறந்து ஒரு வாரத்திற்கு பிறகு, அவரின் நினைவுகள் இன்று வந்ததாகவும், அதனால்தான் இந்த வீடியோவை வெளியிட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.