காதலை பற்றி சூசகமாக புகைப்படத்துடன் கவின் வெளியிட்ட பதிவு.. சண்டையிடும் லாஸ்லியா ரசிகர்கள்

Report
2392Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த கவின். தற்போது பட வாய்ப்புகளால் ரொம்ப பிஸியாகவே இருக்கிறார்.

சமீப நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாகவே இருக்கும் கவின் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் தனிமையில் இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் காதலர்களாக வலம் வந்த கவின் மற்றும் லாஸ்லியா வெளியே வந்த பின்னர் ஒன்றாக இல்லை என்ற தகவல்கள் வெளிவந்தன. இருவரும் காதலை முறித்துகொண்டார்களா? இல்லை மறைத்து வருகிறார்களா? என ரசிகர்கள் தொடர்ந்து அவர்கள் பதிவிடும் புகைப்படத்திற்கு கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், கவின் தற்போது ஒரு ஸ்டைலிஷான புகைப்படத்தை பகிர்ந்து, அதில் ”புதியன கழிதல் பழையன புகுதல்.. ! அதுதானே #Throwback 😬 என பதிவிட்டுள்ளார்.

இதைக்கண்ட லாஸ்லியா ஆர்மிகள் மற்றும் கவின் ஆர்மிகள் இருவரும் லாஸ்லியாவை குறிப்பிட்டுள்ளீர்கள் என பலவிதமான கமெண்ட்ஸ்களை அடித்து வருகின்றனர்.