மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சினை... மனைவியால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து! பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த பாலாஜி

Report
723Shares

சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் தாடி பாலாஜி. சினிமா வாய்ப்பு குறைந்து வந்த நிலையில், ரிவி நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகின்றார்.

கடந்த வருடம் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது மனைவியும், இவரும் கலந்து கொண்டனர். அதற்கு முன்பு இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதும் பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு பாலாஜி மீது அவரது மனைவி மீண்டும் மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் மது அருந்துவிட்டு பாலாஜி தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, கண்ணாடியை உடைத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டினை மறுத்த தாடிபாலாஜி இதுகுறித்து பேசியுள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார். என் மன உளைச்சலுக்கு அவர் தான் காரணம். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் நித்யா எங்கள் மகளை பகடைக்காயாக பயன்படுத்துகிறார் என்றும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் உதவி ஆய்வாளர் மனோஜ்குமார், தனது குழந்தை போஷிகாவிடம் தேவையில்லாததைக் கூறி அதை தன்னிடம் சொல்லும்படி ஏவிவிடுவதாகவும் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் உதவி ஆய்வாளர் மனோஜ் மற்றும் தனது மனைவி நித்யா ஆகியோரால் தனது குழந்தை போஷிகாவிற்கு ஆபத்து உள்ளதாக பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தன்னுடைய மொத்த குடும்பத்தையும் மனோஜ் நாசமாக்கிவிட்டதாக கூறியுள்ள பாலாஜி, அவரை இடம் மாற்றம் எல்லாம் செய்யக்கூடாது, அவரை நிரந்தரமாக பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறியுளளார்.