திருமணம் ஆகாமல் பிக்பாஸ் ரைசாவிற்கு மகனா?... புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
899Shares

பிக்பாஸ் நடிகை ஷேர் செய்த இன்ஸ்டா பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மாடல் அழகி ரைஸா வில்சன். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ள ரைஸா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு பல படங்களில் நடித்து வருகின்றார்.

தற்போது லாக்டவுன் அமலில் உள்ளதால் தனது செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவழித்து வருகிறார். அவ்வபோது போட்டோ ஷுட்டுக்களும் நடத்தி வருகிறார் ரைஸா வில்சன்.

பியார் பிரேமா காதல் படம் ரிலீஸ் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நடிகர் ஹரீஷ் கல்யாண் மடியில் அமர்ந்து பியானோ வாசிப்பது போன்ற இமேஜை ஷேர் செய்திருந்தார்.

இந்நிலையில் தனது செல்லப் பிராணிகளில் ஒன்றான கறுப்பு பூனையுடன் போஸ் கொடுத்துள்ளார். தனியாக ஒரு மரத்துக்கு அடியில் மடியில் பூனைக்குட்டியுடன் அமர்ந்துள்ள ரைஸா வில்சன், அந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு என்னுடனும் என் மகனுடனும் யாரும் பேசாதீர்கள் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் கல்யாணமே ஆகல.. அதற்குள் மகனா.. ஷாக்காயிட்டேன் போங்க என கிண்டலாக கமெண்ட் பதிவிட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் அம்மாவும் பிள்ளையும் அழகாக இருக்கிறீர்கள் என கூறியுள்ளனர்.

View this post on Instagram

Don’t talk to me or my son ever again 😼

A post shared by Raiza Wilson (@raizawilson) on