ரொமான்ஸான புகைப்படத்தினை வெளியிட்டு அசத்திய சாயிஷா... ஆர்யாவுடன் அரங்கேறிய கொண்டாட்டம்!

Report
893Shares

நடிகை சாயிஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் கணவர் ஆர்யாவும் அவரும் இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகை சாயிஷா தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சாயிஷா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்த நடிகை சாயிஷா, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். தமிழில் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்தார் சாயிஷா.

அப்போது இருவருக்கும் இடையே காதல் பற்றிக்கொள்ள கடந்த ஆண்டு மார்ச் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மீண்டும் இணைந்து டெடி படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படம் கொரோனா பெருந்தொற்றால் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளி போகிறது.

இந்நிலையில் நடிகை சாயிஷா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சாயிஷாவும் ஆர்யாவும் நெருக்கமாக உள்ள க்யூட் ரொமான்டிக் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி கொரோனா லாக்டவுன் நேரத்தில் கணவர் ஆர்யாவுக்கு விதவிதமாக சமைத்துப் போட்டார் சாயிஷா.

அதன் ஒரு பகுதியாக அவர் ஆர்யாவுக்கு கப் கேக் செய்து கொடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். தட்டில் கப் கேக் இருந்ததை பார்த்த ஆர்யா தனது மனைவிக்கு கேக்குக்கு பரிசாக கன்னத்தில் இறுக்கி அனைத்து முத்தம் கொடுத்தார். அந்த போட்டோ ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து, லாக்டவுன் நேரத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்து போரடித்த போன சாயிஷாவும் ஆர்யாவும் மொட்டை மாடியில் குடும்பத்துடன் அரட்டை அடித்தனர். அவர்கள் ஒருவரை ஒரு அணைத்தப்படி கலகலப்பாக சிரிக்கும் போட்டோவையும் சாயிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இந்த ஒரு போட்டோவே சினிமாத்துறையில் அவர்கள் சிறந்த ஜோடி என்பதை காட்டுவதாக உள்ளது.

வாழ்க்கையில் பல மறக்க முடியாத நினைவுகளை பெற பல இடங்களுக்கு பயணம் செய்வது சிறந்தது என்பதை உணர்ந்த ஆர்யா சாயீஷா ஜோடி முதல் முறையாக கடல் டைவிங்கில் பங்கேற்றது. இதன் மூலம் ஆர்யாவுடன் ஒரு மறக்க முமடியாத அனுபவத்தை பெற்றார் சாயிஷா.

நடிகை சாயிஷா தனது கணவருடன் மாலத்தீவுக்கு சென்றபோது எடுத்த இந்த போட்டோவும் செம வைலரலானது. இந்த போட்டோவை திருமணத்திற்கு பிறகு தனது கணவரின் முதல் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார் சாயிஷா. இதில் இருவரும் ஒரே கலரில் வித்தியாசமாக போஸ் கொடுத்து அசத்தியிருந்தனர்.

அடுத்து அவர்களின் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத முக்கிய போட்டோவான அவர்களின் திருமண போட்டோவும் தற்போது வைரலாகி வருகிறது. திருமணத்தின் போது இருவரும் தலைப்புச் செய்தியாகினர். இந்த போட்டோவில் இருவரும் அவ்வளவு க்யூட்டாகவும் காதல் சொட்ட சொட்ட காணப்பட்டனர்.

loading...