மனதை சிலிர்க்க வைக்கும் தல அஜித்தின் சோகமான பக்கங்கள் : வீழ்ந்த போதிலும் எழுந்த சாதனைகள்

Report
568Shares

அஜித் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்று புகழும் நடிகர். அஜித் முதன் முதலாக சினிமாவில் அறிமுகமானது பிரம்ம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் தான்.

இந்த படத்தின் இயக்குனர் செட் வேலைக்காக கப்பலி இருந்த போது அங்கிருந்து தவறி விழுந்து இறந்துள்ளார். இதனால் படபிடிப்பு நின்றுள்ளது, அஜித்தின் திரைப்பயணம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆனால், பாக்யராஜ் தான் அந்த படத்தின் மீதிக்கதையை வடிவமைத்து கிளைமேக்ஸ் இப்படி வைக்கலாம் என்று அறிவுரை கூறினாராம். அஜித்தின் திரைப்பயணம் ஆரம்பமே இப்படி ஆரம்பித்தாலும், அவரின் கடின உழைப்பு தான் அவரை இந்த நிலை வரை உயர்த்தியுள்ளது.

அது மட்டும் அல்ல, திரைப்பயணம் என்பது அவரின் கனவுக்கூட இல்லையாம்.

பைக், கார் ஓட்டுவதில் தான் அதிக ஆர்வம் இருந்துள்ளது. பைக் பந்தயம் தான் தனது தொழில் என்று தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் பைக் ரேஸில் கலந்து கொள்ள பணம் தேவை என்பதை உணர்ந்த அவர், அதற்காக தனது தந்தையின் நண்பர் நடத்திய ஏற்றுமதி நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலைக்கு சேர்ந்தார்.

இதற்கிடையே சென்னிமலை ஈரோடு நகரங்களிலிருந்து பெட் சீட் வாங்கி வந்து சென்னையில் விற்கும் சொந்த பிசினஸ் செய்து பணம் திரட்டி வந்தார். ஆனால் இது மட்டுமே போதாது என்ற நிலையை எட்டிய போது. அவருடைய நண்பர்கள் குழு அவருக்கு ஒரு ஆலோசனை வழங்கியது.

வசீகரமான தோற்றம், வித்தியாசமான குரலுடன் பார்ப்பதற்கு ஹீரோ போலவே இருப்பதால். நீ ஏன் சினிமாவில் சேரக்கூடாது என நண்பர்கள் கொடுத்த ஆலோசனைக்கு செவி சாய்த்த அஜித் 1980களின் இறுதியில் மாடலிங் துறையில் கால் பதித்தார்.

விளம்பரங்கள், தூர்தர்ஷன் தயாரித்த குறும் படங்கள் என மெல்ல மெல்ல மாடலிங் துறையில் கவனம் ஈர்க்க தொடங்கிய அவருக்கு 1993இல் தெலுங்கில் வெளியான பிரேம புஸ்தகம் வெள்ளித்திரையில் அறிமுகப் படமாக அமைந்தது.

இதே காலகட்டத்தில் தமிழில் அமராவதி படத்திற்காக இயக்குனர் செல்வா ஒரு நாயகனை தேடிக் கொண்டிருந்தார்.

அப்போது அஜித்தின் புகைப்படத்தை பார்த்து அவரை அமராவதியின் நாயகனாக ஆக்கினார். அமராவதி படத்தில் பாடல்கள் பேசப்பட்ட அளவிற்கு, படம் சோபிக்கவில்லை எனினும், துடிப்பான இளைஞனாக மக்கள் மனம் கவர்ந்த அஜித்திற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.

ஒரு கட்டத்தில் அவர் முன்பு ஒரு மெல்லிசான கோடு விரிந்தது. ஒரு பக்கம் பைக் ரேஸ், இன்னொரு பக்கம் சினிமா இதில் எதை தேர்வு செய்வது என்ற கேள்வி எழுந்த பொழுது அவர் தேர்ந்தெடுத்தது சினிமாவை.

சினிமாவில் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகளாகியும் தான் எதிர்பார்த்த புகழ் வெளிச்சம் அஜித்திற்கு கிடைக்கவில்லை. இவருடன் விளம்பரப்படங்களில் நடித்தவர்கள் அடுத்தடுத்து பல முன்னணி விளம்பர படங்களில் நடித்து முன்னேறிக் கொண்டே போக, சினிமாவை நம்பி வந்த அஜித்தின் நிலையோ கேள்விக்குறியானது. அந்த சமயத்தில் விளம்பர துறையைச் சேர்ந்த அஜித்தின் நண்பர் ஒருவர் தான் இயக்கப்போகும் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். மாதத்திற்கு 50 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் என்ற உற்சாகம் அளித்தார்.

ஆனால் இனி சினிமாதான் என்று, லட்சிய கனவுகளோடு திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர்க்கு அதிலிருந்து பின்வாங்க மனமில்லை. இதே சினிமாவில் நிச்சயம் ஒருநாள் சாதித்துக் காட்டுவேன் என வைராக்கியத்தோடு போராடிய அஜித்திற்கு அடுத்து ஆசை விசிட்டிங் கார்டாக மாறிவிட்டது. மணி ரத்னம் தயாரிப்பில் வெளியான மே மாதம் தான் அஜீத் ஹீரோவாக அறிமுகமாக இருந்த படம்.

ஆனால் அந்த சமயத்தில் அவர் பைக் ரேஸில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அதில் நடிக்க முடியாமல் போனது. பின்னர் மணிரத்னத்திடம் தான் வாங்கிய அட்வான்ஸ் இருக்க அவர் நடித்துக் கொடுத்த படம் தான் ஆசை.

ஆனால் அந்த ஆசை தான் அவரை புகழின் வெளிச்சத்தில் எடுத்து வந்தது. ஆசை படத்தில் இடம்பெற்ற “கொஞ்ச நால் பொறு தலைவா” பாடல் தான் அன்பின் அடையாளமாக இருந்தது.

எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆசை நாயகன் என ரசிகர்கள் கூட்டம் இவரை பின்தொடரவும் தொடங்கியது. ஆனால் ஆசை படத்தின் வெற்றியில் அஜித்திற்கு முழு திருப்தி இல்லை, ஏன் என்றால் பிரகாஷ்ராஜ் நடிப்பும், தேவாவின் இசையும் தான் அப்படத்தின் வெற்றிக்கு காரணம் என விமர்சனம் எழுந்ததையும் ஏற்றுக்கொண்டார். தன் பெயர் சொல்லும்படி ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என நினைத்தார்.

அப்படியான தருணத்தில் வெளிவந்து அவரது பெயரையே மாற்றி அமைத்த படம் தான் காதல் கோட்டை. பார்க்காமலேயே காதல் என்னும் பரிசோதனை முயற்சியில் காதல் கோட்டை படத்தின் கதை உருவாகியிருந்தது. ஆரம்ப காலகட்டங்களில் இது போன்ற படங்களில் நடிக்க எந்த ஒரு ஹீரோவும் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் ஒரு கணம் கூட யோசிக்காமல் காதல் கோட்டை படத்தில் நடிக்க சம்மதித்தார். அதன் கதை மீது அவர் வைத்த நம்பிக்கை எப்படி அவர் எதிர்பார்த்தது போலவே காதல் கோட்டை வெளியாகி மாபெரும் வெற்றியை சந்தித்தது.

அப்படி ஆரம்பித்த வெற்றி இன்று மாபெரும் வெற்றியாக உருவெருத்துள்ளது.

ஊரடங்கில் முடங்கியிருக்கும் அஜித் ரசிகர்களுக்காக இந்த அழகிய வரலாற்று பதிவு. அவரை போலவே சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் ரசிகர்களுக்கு இவரின் வாழ்க்கை காயங்கள் கூட ஒரு மருந்து தான்.