மீரா மிதுன் சர்ச்சையை தகர்த்தெரிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய்! தளபதியை மிஞ்ச யாரு இருக்கா

Report
1375Shares

நடிகர் மகேஷ் பாபு அவரின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள் விஜய், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஸ்ருதி ஹாசனுக்கு செடி நடும் சவாலை விடுத்திருந்தார்.

கொரோனா ஊரடங்கில் வேலையில்லாமல் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் விஜய் அந்த சவாலை அசால்ட்டாக முடித்து புகைப்படம் வெளியிட்டார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதேவேளை, தளபதி விஜய்யின் புகைப்படங்கள் ரசிகர்கள் எதிர்பார்க்காத நிலையில், திடீரென வெளியான நிலையில், விஜய் ரசிகர்கள் அதனை வேற லெவலில் #Thalapathy, #Master என்ற ஹாஷ்டேக்குகளை போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மீரா மிதுன் சர்ச்சையால் கடுப்பாகி இருந்த ரசிகர்கள், தளபதி விஜய்யின் புகைப்படங்களால் ஆறுதல் அடைந்து உற்சாகமாகி உள்ளனர். ஆகஸ்ட் 15ம் தேதி மாஸ்டர் பட பாடல் வீடியோவும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தளபதி விஜய் மரக்கன்றை நட்டது குறிப்பிடத்தக்கது.

loading...