உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்! அப்படியென்ன செய்தார்?

Report
6143Shares

கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ராதிகா சரத்குமார் இன்றுடன் 42 ஆண்டுகளை திரைத்துறையில் முடித்துள்ளார்.

கிழக்கே போகும் ரயில் படம் கடந்த 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியானது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், சின்னத்திரையில் களமிறங்கி ஒட்டுமொத்த இல்லத்தரசிகளையும் இன்று வரை கவர்ந்து வருகின்றனர்.

ராதிகா நடிகையாகி நேற்றுடன் 42 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அவரை பாராட்டி மகள் ரயன் மிதுன் ட்வீட் செய்துள்ளார். ரயன் மிதுனின் ட்வீட்டை பார்த்த ராதிகாவின் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

வாழ்த்துக்கள் ராதிமா. இன்று போன்று என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்களும், குடும்பத்தாரும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்தனை செய்கிறோம். கலைதாய் பெற்ற கலையரசி ராதிமா 42 வருட திரைப்பயணம். மகிழ்ச்சியானாலும் துக்கமானாலும் தங்களின் திரைப்படம், தன்னம்பிக்கை பார்த்தே தேற்றிக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளனர்.

42 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறித்து ராதிகாவும் தன் செல்ஃபியை வெளியிட்டு ட்வீட் செய்திருக்கிறார். உங்களின் கடின உழைப்பால் மட்டுமே இத்தனை ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறீர்கள் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.