மீரா மிதுன் சர்ச்சைக்கு அதிரடியாக பதில் வழங்கிய நடிகர் சூர்யா : உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Report
2339Shares

நடிகர் சூர்யா அண்மையில் எழுந்த மீரா மிதுன் சர்ச்சை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்மையில் மீரா மிதுன், நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் அவர்களின் குடும்பத்தினர் குறித்து அவதூறாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பலதரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. மேலும் இயக்குநர் பாரதிராஜாவும் இவ்விவகாரத்தில் தனது கடுமையான கண்டனத்தை முன் வைத்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இச்சர்ச்சை குறித்து பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்த தனது பதிவில்., ''எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.'' என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்சியில் உள்ளனர்.

loading...