ஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்!

Report
5173Shares

மாடல் அழகியான மீரா மிதுன் கடந்த நாட்களுக்கு முன்னர், சூர்யா மற்றும் விஜய் இருவர் குறித்தும் சர்ச்சையான கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டார்.

இதைக்கண்ட ரசிகர்கள், மீரா மிதுனை திட்டி தீர்க்க, ரசிகர்களின் இந்த செயலுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக்கொண்டு தானும் அதேபோல தரம் தாழ்ந்த வார்த்தைகளில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

அதில் “சூர்யா, விஜய் ரசிகர்கள் என்னை ஆபாசமாக திட்டினால், பதிலுக்கு நான் சூர்யாவின் மனைவி ஜோதிகா மற்றும் விஜய்யின் மனைவி சங்கீதா ஆகியோர் குறித்து அதே வார்த்தைகளில் வீடியோ வெளியிடுவேன்.

நக்மாவின் தயவால் சினிமாவுக்குள் நுழைந்தவர் அவரது தங்கை ஜோதிகா. அவரது ரகசியங்கள் எல்லாம் கோலிவுட்டுக்கே தெரியும்.. சூர்யாவை திருமணம் செய்துகொண்டபின் புனித பசுவாக மாறிவிட்டார்.

விஜய்யின் மனைவி சங்கீதாவின் லண்டன் ரகசியங்கள் எல்லாம் எனக்கு தெரியும்.. சூர்யா, விஜய் ரசிகர்கள் என்னை திட்டுவதை நிறுத்தாவிட்டால் அவற்றை வெளியிடுவேன்.

எனக்கும் ஒரு காலம் வரும்.. அப்போது நான் தமிழகத்தின் முதலமைச்சராக ஆவேன்.. அப்போது இதுபோன்ற ரசிகர்களை சைபர் புல்லிங் வழக்கில் உள்ளே தள்ளுவேன்” என்றும் கூறினார்.

இதனால் இவர் மீது வழக்குகளும் குவிந்தன. இது ஒருபுறம் இருக்க, மீரா மிதுன் மீது ஆரம்ப காலம் முதலே குற்றசாட்டுகளை வைத்து வரும் ஜோ மைக்கேல் என்பவர் மீரா மிதுன் இரு ஆண்களுடன் ஒரே அறையில் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், அந்த ஆண்களின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவரது மடியில் படுத்துக்கொண்டிறுகிறார் மீரா மிதுன். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை வண்டைவண்டையாக விளாசி வருகின்றனர்.