விஜய் மனைவியை அசிங்கமாக பேசிய மீரா மிதுன்: பொலிசில் புகார்

Report
2939Shares

மொடலிங் துறையிலிருந்து 8 தோட்டக்கள் படம் மூலம் திரைக்கு வந்தவர் மீரா மிதுன்.

அழகிப் போட்டியை நடத்துவதாக கூறி பலரும் தங்களை ஏமாற்றியதாக புகாரளிக்க மீரா மிதுன் பிரபலமானார்.

அடுத்ததாக பிக்பாஸ் தமிழ் சீசனில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய நபராகவும் வலம் வந்தார்.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், அடிக்கடி வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பின்னர், வாரிசு அரசியல் பெரும் விவாதமாக மாறியது.

பாலிவுட்டைப்போல கோலிவுட் எனப்படும் தமிழ் திரையுலகிலும் ஒரு மாஃபியா கேங் இருப்பதாகவும், அதனால் தான் தனக்கு எந்த பட வாய்ப்பு வந்தாலும் அதை அவர்கள் தடுத்து விடுகிறார்கள் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் மீரா மிதுன்.

தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யா பற்றி மோசமான விமர்சனங்களை முன்வைத்ததால் அவர்கள் ரசிகர்கள் மிக கேவலமாக திட்டித் தீர்த்தனர்.

இதற்கு பதில் கொடுத்து மீரா மிதுன் வெளியிட்ட வீடியோவில், விஜய், சூர்யாவின் மனைவியை அசிங்கமாக பேசினார்.

இதனால் ரசிகர்கள் கொதிந்தெழுந்து மீரா மீதுன் மீது தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட பொலிசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.