வனிதாவின் தங்கை பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்... அவருக்கு போட்டியா இருக்குமோ?... புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

Report
3410Shares

நடிகர் விஜயகுமார், மஞ்சுளாவின் இளைய மகளான ஸ்ரீதேவி தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.

காதல் வைரஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து, மாதவனுடன் 'பிரியமான தோழி', தனுஷுடன் 'தேவதையை கண்டேன்', ஜீவாவுடன் 'தித்திக்குதே' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இவருக்கும் ராகுல் என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது அவருக்கு ரூபிகா என்ற ஒரு பெண் குழந்தையுள்ளது.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து நடிகை ஸ்ரீதேவி சிறுவயதில் இருப்பதை போலவே அவரது மகள் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.